மேலும் 98 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகினார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகினார்.
98 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று குறைந்தும், உயர்ந்தும் என மாறி, மாறி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை, திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒருவர் பலி
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 496&ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 86 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 585&ஆக உள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 959 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியாகினார். இதனால் பலி எண்ணிக்கை மாவட்டத்தில் 952 ஆக உள்ளது.
Related Tags :
Next Story