ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79 மனுக்கள் தள்ளுபடி


ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79 மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 24 Sept 2021 11:41 PM IST (Updated: 24 Sept 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79 மனுக்கள் தள்ளுபடி

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 95 பேர், 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 684 பேர், 2,220 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 5,625 பேர், 288 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட 1,247 பேர் என மொத்தம் உள்ள 2,648 பதவிக்கு 7,651 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டதில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 95 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 684 மனுக்களில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 5,625 மனுக்களில் 51 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,247 மனுக்களில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆக மொத்தம் 7,651 மனுக்களில் 79 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 7,572 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Next Story