சிறுமிக்கு திருமணம்; 5 பேர் கைது
திருப்பத்தூர் அருகே 17 வயதான சிறுமிக்கு திருமணம் நடந்தது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே 17 வயதான சிறுமிக்கு திருமணம் நடந்தது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொலை மிரட்டல்
திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தாய் இறந்து விட்டார். அப்பாவிற்கு கண் பார்வை கிடையாது. சிறுமியுடன் கூடப்பிறந்தவர்கள் 6 ஆண்கள். இந்நிலையில், கடந்த 19.5.2021-ம் தேதி அன்று விஜயபுரத்தைச் சேர்ந்த சின்னு மகன் வெள்ளைத்துரை (19) என்பவருக்கு கிராமத்தினர் ஏற்பாட்டில் சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
பின்னர் திருமணம் நடந்து முடிந்த சில வாரங்களில் வெள்ளைத்துரை, சிறுமியிடம் பணம் கேட்டும், துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனையடுத்து, சிறுமி வீட்டை விட்டு தனது அப்பா வீட்டிற்கு செல்ல முயன்றபோது, அவரை மிரட்டி உங்க அப்பாவையும் கொன்று விடுவோம், உன்னை அடித்து தூக்கில் தொங்க விட்டு விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சிறுமி அங்கிருந்து தனது அப்பா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவரது தந்தை திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
5 பேர் கைது
இதனையடுத்து மகளிர் போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பிற்கு இவர்களை அனுப்பியுள்ளனர். அவர்கள் விசாரணை நடத்திய போது 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்தது தெரிய வந்தது. இதன் பின்னர் எஸ்.புதூரை சேர்ந்த ஊர்நல அலுவலர் பெண் பிரிவைச் சேர்ந்த கயல்விழி என்பவர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story