முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
கரூர்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 9&ந்தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளரும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனருமான கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக தேர்தல் பார்வையாளர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தினையும், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையத்தினையும், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டி உள்ளிட்ட பொருட்களையும் தேர்தல் பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக உள்ளாட்சி தேர்தல்) மலர்விழி, ஊரக வளர்ச்சித்துறை உதவிசெயற்பொறியாளர் அழகுராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story