ஜோலார்பேட்டை அருகே ரெயில்வே சுரங்க பாதையில் உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு


ஜோலார்பேட்டை அருகே ரெயில்வே சுரங்க பாதையில் உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Sept 2021 12:07 AM IST (Updated: 25 Sept 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே ரெயில்வே சுரங்கப் பாதையில் அடிக்கடி தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுவது குறித்து உதவி கோட்ட பொறியாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே ரெயில்வே சுரங்கப் பாதையில் அடிக்கடி தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுவது குறித்து உதவி கோட்ட பொறியாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

உதவிகோட்ட பொறியாளர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பக்கிரிதக்கா பகுதியில் கட்டேரி, அம்மையப்பன் நகர், இடையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்ல ரெயில்வே சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

 இதுகுறித்து நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ள ரெயில்வே துறையினருக்கு அப்பகுதி மக்களும், துறை அதிகாரிகளும் தெரிவித்திருந்த நிலையில் நேற்று மாலை ஜோலார்பேட்டை ரெயில்வே உதவி கோட்ட பொறியாளர் அன்கித் வர்மா, சீனியர் என்ஜினீயர் சுரேஷ், கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் ரெயில்வே சுரங்க பாதையை ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது உதவி கோட்ட பொறியாளர் அன்கித் வர்மா கூறியதாவது:-

ஊராட்சி நிர்வாகம்

திருப்பத்தூர்& வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் ஏரி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ரெயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரை மின் மோட்டார் மூலம் அகற்றினாலும் ஏரி கால்வாய் வழியாக செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் மீண்டும் மழை நீர் சுரங்க பாதைக்கு வந்து விடுகிறது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
அதாவது கட்டேரி ஊராட்சி, ஏலகிரி கிராமம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து துறை அதிகாரிகளால் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இங்கு தேங்கி நிற்கும் மழை நீருக்கு நிரந்தர தீர்வுகாண முடியும் என தெரிவித்தார். எனவே பல வருடங்களாக மழைக்காலங்களில் ரெயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை நிரந்தரமாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story