கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு
கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு
அரக்கோணம்
தக்கோலத்தை அடுத்த நகரிகுப்பம் கிராமத்தில் படவேட்டம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் கோவிலை திறப்பதற்காக அர்ச்சகர் வந்தபோது கோவில் உண்டியல் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து கிராமத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். கிராமத்தினர் வந்து பார்த்த போது கோவில் உண்டியல் உடைத்து அதில் இருந்த பணத்தையும், கதவின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் சாமி நகைகளையும் மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது. மேலும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, ஹார்டு டிஸ்கையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் அர்ச்சகர் அளித்த புகாரின் பேரில் தக்கோலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story