300 வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்தது
மணப்பாறையில் பலத்த மழையால் நள்ளிரவில் குளம் உடைந்ததால் 300 வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
மணப்பாறை, செப்.25&
மணப்பாறையில் பலத்த மழையால் நள்ளிரவில் குளம் உடைந்ததால் 300 வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பலத்த மழை
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் இரவு 10 மணிக்கு பிறகு பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. மணப்பாறை நகரில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. ராஜீவ் நகர் பகுதியில் உள்ள அப்பு அய்யர் குளத்தின் ஒரு பகுதியில் கரை உடைப்பு ஏற்பட்டு மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஊருக்குள் புகுந்தது.
ராஜீவ் நகர், இந்திராநகர் சேது ரெத்தினபுரம், முத்தன் தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த வெள்ளநீர் பாய்ந்து ஓடியது. இதன்காரணமாக அப்பகுதிகளில் உள்ள சுமார் 300&க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இரவு நேரத்தில் திடீரென வெள்ள நீர் வீட்டுக்குள் வருவதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக இந்த மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நின்றது.
வாகனங்கள் பழுது
பின்னர் நள்ளிரவுக்குப் பின் நீர் வடிய தொடங்கியது. வீடுகளுக்குள் தேங்கியிருந்த மழை நீரை பொதுமக்கள் அப்புறப்படுத்தினர். சாலைகளிலும் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முழுமையாக தடைபட்டு நின்றது. பஸ் நிலையம் முன்பு குளம் போல் தேங்கிய மழை நீரால் பல்வேறு வாகனங்கள் பழுதாகி பாதியிலேயே நின்று கொண்டன.
வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியவர்கள் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் வீட்டிற்கு செல்ல முடியாமல் நள்ளிரவு சாலையில் காத்திருந்தனர். மழைநீர் வடிந்த பின்னர் அவர்கள் வீடுதிரும்பினர். இதேபோல் தியேட்டர்க்குள்ளும் மழை நீர் புகுந்ததால் அந்த நீரை வெளியேற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் மணப்பாறை பகுதியில் இந்த மழை பெய்துள்ளது.
திருச்சி மாநகர்
இதேபோல் திருச்சி மாநகரில் நேற்று இரவு 10.45 மணிக்கு திடீரென மிதமான மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. திருச்சி ஜங்ஷன், மத்திய பஸ் நிலையம், தில்லை நகர், சத்திரம் உள்ளிட்ட மாநகரின் பல இடங்களில் மழையால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல மாவட்டத்தில் பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.

Related Tags :
Next Story