புதுக்கோட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று


புதுக்கோட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 25 Sept 2021 12:53 AM IST (Updated: 25 Sept 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 26 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 188 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 403 ஆக உள்ளது.
 இந்தநிலையில், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு பரிசோதனை செய்யப்பட்டநிலையில் அந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக நேற்று அந்த மாணவன் படித்த வகுப்பை சேர்ந்த சுமார் 50 மாணவர்களுக்கு கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும்வரை அந்த வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



Next Story