மனைவியை கொன்ற கணவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை


மனைவியை கொன்ற கணவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Sept 2021 1:12 AM IST (Updated: 25 Sept 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை கொன்ற கணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே விட்டாநிலைப்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (வயது 45). இவரது முதல் மனைவி மதலையம்மாள்(45). சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப சண்டையின்போது மதலமையம்மாள் மீது வேளாங்கண்ணி மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகிய அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 9&ந் தேதி இறந்தார். இது தொடர்பாக இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணியை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் மனைவியை கொலை செய்த வேளாங்கண்ணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமுவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் பரிந்துரை செய்தார். அதன்படி, வேளாங்கண்ணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான நகலில் போலீசார் அவரிடம் கையெழுத்து பெற்றனர். மேலும், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.


Next Story