900 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்கோட்டையில் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகரில் நேற்று நகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவின்படி நகர் நல மைய மருத்துவர் கோமதி ஏற்பாட்டில் சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன் ஒருங்கிணைப்புடன் வெள்ளக்கோட்டை செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.என். திருமண மண்டபம் ஆகிய இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின் தடுப்பூசி வந்ததால் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நேற்று நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story