மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ராஜபாளையத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை முன் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்.  கொரோனா காலத்தில் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான 750 கிடங்குகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்லும் முடிவை மாநில அரசு கை விட வேண்டும். 44 தொழிலாளர் நல சட்டங்களை மத்திய அரசு 4 தொகுப்பாக மாற்றியதை கண்டிப்பது,  3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்க பொருளாளர் சங்கரி, கன்வீனர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. கருகப்பூலாம்பட்டியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
3. ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் பிடித்து சேதமான படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4. டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
பால்ராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி வாக்கு எண்ணிக்கை மையத்தை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது