260 ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை; 53 பேர் கைது


260 ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை; 53 பேர் கைது
x
தினத்தந்தி 25 Sept 2021 1:38 AM IST (Updated: 25 Sept 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழக போலீஸ் டி.ஜி.பி. உத்தரவுப்படி மாவட்டத்தில் 260 ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர், 
தமிழக போலீஸ் டி.ஜி.பி. உத்தரவுப்படி மாவட்டத்தில் 260 ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 53 பேர் கைது செய்யப்பட்டனர். 
உத்தரவு 
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
பல்வேறு போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் வீடுகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 260 ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
53 பேர் கைது 
 இதில் 7 பேரின் வீடுகளில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் 7 பேர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 110&ன்கீழும், மேலும் 46 பேர் மீது குற்றவியல் சட்டம்பிரிவு 109&ன்கீழும் வழக்குப்பதிவு செய்து மொத்தம் 53 பேரை கைது செய்தனர்.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் கூறியதாவது:& 
விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். மாவட்டத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாவட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை.
 இவ்வாறு அவர் கூறினார். 

Next Story