சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு
சிவகாசியில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளை பாராட்டினர்.
சிவகாசி,
சிவகாசி எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் பயிலும் ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு மாணவி பிரேமலதா மற்றும் வரலாற்றுத்துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி தீப்ஷிதா ஆகியோர் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் பிரேமலதா தங்க பதக்கமும், தீப்ஷிதா வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். இந்த 2 மாணவிகளும் ஏற்கனவே பஞ்சாபில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் பெற்ற மாணவிகளை கல்லூரியின் முதல்வர் பழனீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story