கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை பெற்று தர வேண்டும்
கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை பெற்று தர வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விருதுநகர்,
கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை பெற்று தர வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறை தீர்க்கும் கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், விவசாயத்துறை இணை இயக்குனர் உத்தண்ட ராமன், புலிகள் சரணாலய இயக்குனர் டாக்டர் திலீப்குமார், சிவகாசி சப்-கலெக்டர் பிரித்திவிராஜ், மாவட்ட கூட்டுறவுவங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்பு துறை இணைஇயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன், அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா மற்றும் நிர்வாகிகள் வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை கடந்த 2018-2019-ம் ஆண்டிலிருந்து கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ. 10 கோடியினை பெற்றுத்தரக்கோரி அரை நிர்வாண கோலத்தில் வந்து அதே கோலத்தில் கூட்டத்திலும் கலந்து கொண்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கொள்முதல் நிலையம்
இக்கூட்டத்தில் பேசிய விவசாய சங்க தலைவர் விஜய முருகன், வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தை அமைக்க வேண்டும். நாட்டு மாடுகள் வனப்பகுதியில் மேய சென்றால் புலிகள் சரணாலயம் எனக்கூறி மாடுகளை விரட்டி விடும் நிலை உள்ளது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகடனுக்கான தொகையை பிடித்தம் செய்து கொள்ளும் நடைமுறை பரவலாக இருந்து வருவதாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து பதிலளித்த கலெக்டர் மேகநாத ரெட்டி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகடன் தொகையை 19 ஆயிரத்து 343 பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் காட்டு பன்றிகளால் பயிர்கள் சேதம் அடைவதை தடுக்கவும் வனத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.
2017 -2018-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வாசுதேவநல்லூர் தனியார் கரும்பாலை தரவேண்டிய நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
Related Tags :
Next Story