ஆடு திருடிய 3 பேர் கைது
நெல்லை அருகே ஆடு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் காணாமல் போனதாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்படி குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் நேரடி மேற்பார்வையில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையிலான போலீசார் விசாரனை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில், ஆடு திருடியதாக நெல்லை சந்திப்பு பெருமாள் தெற்கு தெருவை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (வயது 32), பாளையங்கோட்டை இந்திராநகரை சேர்ந்த வள்ளிதுரை என்ற அஜித் (23), பாளையங்கோட்டை செந்தில்நகரை சேர்ந்த விஜய்கணேஷ் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 ஆடுகள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story