காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு


காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 25 Sept 2021 2:22 AM IST (Updated: 25 Sept 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பேட்டை:
நெல்லையை அடுத்த பேட்டை ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 57). இவர் நெல்லை டவுனில் உள்ள உரக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலையில் தனது வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிப்பதற்காக அருகில் உள்ள காம்பவுண்டு சுவர் மீது ஏறினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக காம்பவுண்டு சுவர் இடிந்து விசுவநாதன் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே விசுவநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story