6 ரவுடிகள் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் 6 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்:
தமிழகத்தில் முன் விரோதம் காரணமாக ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு, கொலை சம்பவங்கள் அரங்கேறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ரவுடியிசத்தை மொத்தமாக ஒழிக்கும் வகையில் முக்கியமான நடவடிக்கையை நேற்று முன்தினம் இரவோடு இரவாக தமிழ்நாடு போலீசார் மேற்கொண்டனர். இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை ரவடிகளை பிடிக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்&இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பழைய குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ஆயுதங்கள் வைத்திருக்கின்றனரா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜா, மணி, மணிகண்டன், தமிழ்ச்செல்வன், வினோத், அப்துல்கரீம் ஆகிய 6 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். 2 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story