வயலில் வேலை பார்த்தவர்களை கதண்டுகள் கடித்தது


வயலில் வேலை பார்த்தவர்களை கதண்டுகள் கடித்தது
x
தினத்தந்தி 25 Sept 2021 2:32 AM IST (Updated: 25 Sept 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

வயலில் வேலை பார்த்தவர்களை கதண்டுகள் கடித்ததால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமத்தில் வயலில் கடலை செடி பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அருகே வேலியில் இருந்த கதண்டு கூட்டில் எதிர்பாராத விதமாக மண் விழுந்ததாக தெரிகிறது. இதனால் கூட்டில் இருந்து வெளியேறிய கதண்டுகள் கடலைச்செடி பறிக்கும் பணியில் ஈடுபட்ட உத்திரக்குடி கிராமம் காலனித் தெருவை சேர்ந்த சேகர்(வயது 65), மல்லிகா(40), பாப்பா(56), பஞ்சான்(50), ராஜாராம்(50), ஜெகதம்(40) என 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேரையும் ஓட, ஓட துரத்தி கடித்தன. அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story