பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு பெருமளவில் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று மாலை திடீரென அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த அலுவலகத்திற்கு வந்து சோதனை நடத்தினர். பத்திரப்பதிவு அலுவலகத்தின் ஜன்னல் மற்றும் கதவுகளை பூட்டி மாலை நேரத்தில் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் மற்றும் பத்திரப்பதிவு அலுவலர் ஸ்ரீதர் மற்றும் உதவியாளர் ஜோதி உள்ளிட்ட ஊழியர்களிடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் இந்த சோதனை முடிவடைந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.38 ஆயிரம் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story