திருவள்ளூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் நெடுமரம், பழைய பனப்பாக்கம் பால்வாடி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 60). கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வீட்டுக்கு வந்த வேல்முருகன் தன் அறைக்கு சென்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story