மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 250 பேருக்கு பரிசோதனை


மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 250 பேருக்கு பரிசோதனை
x
தினத்தந்தி 25 Sept 2021 5:36 PM IST (Updated: 25 Sept 2021 5:36 PM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 250 பேருக்கு பரிசோதனை செய்து கொண்டனர்.

சென்னை, 

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தனியார் ஆஸ்பத்திரியுடன் இணைந்து பல்வேறு மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச பொது சுகாதார மருத்துவ முகாம் நடத்தி வருகிறது. அதன்படி நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் இலவச மருத்துவ முகாம் உயர் நீதிமன்ற மெட்ரோ மற்றும் செனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் என காலையில் 115 பேர், மாலையில் 135 பேர் என மொத்தம் 250 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.

வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ, வடபழனி மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் இலவச மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story