கூடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கூடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2021 8:07 PM IST (Updated: 25 Sept 2021 8:07 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கூடலூர்:
கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முல்லைப்பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரள மர்ம நபரை தேசிய பாதுகாப்பு மற்றும் குண்டர் சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கூடலூர் முல்லை சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன், முல்லைப்பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்க தலைவர் சதீஷ் பாபு மற்றும் 5 மாவட்ட விவசாய சங்கம், இயற்கை வேளாண் சங்கம், 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்கம், பெரியாறு அணை மீட்பு குழுவினர் கலந்துகொண்டனர்.

Next Story