சுசீந்திரத்தில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க வாகன பிரசாரம் - முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார்
சுசீந்திரத்தில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க வாகன பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார்.
சுசீந்திரம்,
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி சார்பில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க வாகன பிரசாரம் நேற்று மாலை சுசீந்திரம் பாலத்தில் இருந்து தொடங்கியது. இந்த வாகன பிரசாரத்திற்கு விவசாய அணி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் காரவிளை செல்வன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, மதியழகன், சுசீந்திரம் பேரூர் செயலாளர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாகன பிரசாரத்தை குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களின் நலன் கருதி கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கியது, மகளிருக்கு விலையில்லா பஸ் பயண திட்டம், தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு இலவச சிகிச்சை திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்திற்கு தனித்துறை மூலம் நேரடி கண்காணிப்பில் உடனுக்குடன் நடவடிக்கை என 4 மாதங்களில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி காட்டினார், என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், ராஜன், இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ், துணை அமைப்பாளர் சோமு, பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, வக்கீல் பால ஜனாதிபதி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், ஆதிதிராவிடர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மாசிலாமணி, டேனியல், தாழக்குடி கூட்டுறவு சங்க துணை தலைவர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் அருண் காந்த், தேரூர் பேரூர் செயலாளர் முத்து, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சரவணன், அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் இளங்கோ, துணை செயலாளர் சுந்தர்ராஜ், நிர்வாகிகள் தில்லை செல்வம், காமராஜ், ஷேக் தாவுத், பூதலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சுசீந்திரத்தில் தொடங்கிய பிரசாரம் அஞ்சுகிராமத்தில் முடிந்தது. இந்த வாகன பிரசாரம் 3 நாட்கள் நடக்கிறது.
Related Tags :
Next Story