ஐ.ஏ.எஸ். தேர்வில் கார் டிரைவர் மகன் வெற்றி


ஐ.ஏ.எஸ். தேர்வில் கார் டிரைவர் மகன் வெற்றி
x
தினத்தந்தி 25 Sept 2021 9:36 PM IST (Updated: 25 Sept 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

ஐ.ஏ.எஸ். தேர்வில் கார் டிரைவர் மகன் வெற்றி பெற்றார்.

போடி:
போடியில் உள்ள திருமூப்பனாசாரி தெருவை சேர்ந்தவர் முருகன். கார் டிரைவர். இவரது மனைவி நாகஜோதி. இவர்களது மகன் அருண் பாண்டியன் (வயது 28). இவர் போடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும் 6 முதல் பிளஸ்-2 வரை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியிலும் படித்தார். பின்னர் சென்னை சிவசுப்பிரமணிய நாடார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. எந்திரவியல் பாட பிரிவை படித்து முடித்தார். 
இதற்கிடையே ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக அவர் தொடர்ந்து படித்து வந்தார். தொடர்ந்து 2 முறை தேர்வு எழுதியும் அவர் தேர்ச்சி அடைய வில்லை. தற்போது 3&வது முறையாக அவர் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார். இதில் அவர் இந்திய அளவில் 344-வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story