வடமதுரை அருகே பொக்லைன் எந்திரம் மோதி மூதாட்டி பலி


வடமதுரை அருகே பொக்லைன் எந்திரம் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 25 Sept 2021 10:13 PM IST (Updated: 25 Sept 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே பொக்லைன் எந்திரம் மோதி மூதாட்டி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள சிக்காளிபட்டியை சேர்ந்தவர் பாப்பம்மாள் (வயது 50). நேற்று முன்தினம் மாலை இவர், தனது உறவினர்களான வேடசந்தூர் காந்திநகரை சேர்ந்த அழகம்மாள் (70), மற்றொரு பாப்பம்மாள் (65), உடையாம்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் (55) ஆகியோருடன் தும்மலக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். 
பின்னர் அவர்கள் 4 பேரும் வடமதுரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அங்குள்ள தனியார் நூற்பாலை அருகே அவர்கள் வந்தபோது, அந்த வழியாக வந்த பொக்லைன் எந்திரம் ஆபரேட்டரின் கட்டுப்பாட்டை இழந்து, அவர்கள் 4 பேர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அழகம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பாப்பம்மாள், செல்லம்மாள், மற்றொரு பாப்பம்மாள் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார், அழகம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வெள்ளபொம்மன்பட்டியை சேர்ந்த பொக்லைன் எந்திர ஆபரேட்டரான சரவணக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story