மீண்டும் பணி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு
தூய்மை பரப்புரையாளர்களாக பணியாற்றிய தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர்.
தூய்மை பரப்புரையாளர்களாக பணியாற்றிய தங்களுக்கு
மீண்டும் பணி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு
மயிலாடுதுறை;
தூய்மை பரப்புரையாளர்களாக பணியாற்றிய தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர்.
கோரிக்கை மனு
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குத்தாலம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சமுதாய பரப்புரையாளர்களாக பணியாற்றிய ஜெயா, ராதிகா, வேம்பு ஆகியோர் மீண்டும் தங்களுக்கு அதே பணியை வழங்கக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:&
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2017ம் ஆண்டு முதல் 4 பேர் பணியாற்றி வந்தோம். கொரோனா காலத்திலும் விடுப்பு எடுக்காமல் வீடு வீடாக சென்று மக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தோம். இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்று கடந்த 2ந் தேதி எங்களை பணிக்கு வர வேண்டாம் என பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். நாங்கள் பணியில் தொடர எவ்வளவோ முயற்சி செய்தும், எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
மீண்டும் பணி
இதனால் மனமுடைந்த எங்கள் சக பணியாளர் நதியா என்பவர் கடந்த 6ந் தேதி விஷம் குடித்தார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நதியா கடந்த 9ஆம் தேதி உயிரிழந்தார். நதியாவிற்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று, நதியா இறந்த அன்று நடந்த போராட்டத்தின்போது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நதியாவுடன் பணியாற்றிய எங்கள் 3 பேருக்கும் மீண்டும் பணி வழங்க ஆவன செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எங்களுக்கு பணி வழங்கப்படவில்லை. மேலும் எங்களுக்கு கடந்த 3 மாத சம்பளமும் வழங்கப்படவில்லை. எனவே குத்தாலம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சமுதாய பரப்புரையாளர்களாக எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். வழங்கப்படாமல் உள்ள 3 மாத சம்பளத்தையும் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story