விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 13 ரவுடிகள் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
13 ரவுடிகள் கைது
சரித்திர பதிவேடு ரவுடிகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என 345 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் அவரவர் வீட்டில் உள்ளனரா, இல்லையெனில் அவர்கள் தற்போது எங்கு உள்ளனர், என்ன வேலை செய்கின்றனர் என்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விவரம், நண்பர்களின் விவரங்களை சேகரித்தனர்.
இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு ஆயுதங்கள் வைத்திருந்ததோடு அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதன் அடிப்படையில் விழுப்புரம் அருகே வளவனூரை சேர்ந்த தீபக்ராஜ் (வயது 36) , திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (38) , மணிகண்டன் (26) ,
வானூரை அடுத்த குயிலாப்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (20) , அருள் என்கிற ஆரோபவன் (25) உள்ளிட்ட 13 ரவுடிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த கத்தி, வீச்சரிவாள் என 11 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
Related Tags :
Next Story