தெற்குராஜன் வாய்க்காலில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்


தெற்குராஜன் வாய்க்காலில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
x
தினத்தந்தி 25 Sept 2021 10:41 PM IST (Updated: 25 Sept 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் கடைமடை பகுதி தெற்குராஜன் வாய்க்காலில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிற வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணிகளை தொடங்கி முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம்;
கொள்ளிடம் கடைமடை பகுதி தெற்குராஜன் வாய்க்காலில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிற வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணிகளை தொடங்கி முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தெற்கு ராஜன் வாய்க்கால்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு மேட்டூரிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த சில தினங்களாக வந்து பிரதான வாய்க்கால்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு பாசன வசதி செய்து தரும் பிரதான வாய்க்காலாக தெற்கு ராஜன் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலிலிருந்து 100க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் பிரிந்து சென்று விளை நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. இந்த வருடம் கடைமடை பகுதிக்கு குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் போதிய அளவு தண்ணீர் வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி கடந்த 2 நாட்களாக கொள்ளிடம் கடைமடை பகுதி பிரதான வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் தற்போது கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. 
தூர்வார கோரிக்கை 
ஆனால் தெற்கு ராஜன் வாய்க்கால் மகேந்திரப்பள்ளி மற்றும் காட்டூர் கிராம பகுதியின் கடை கோடியில் உள்ளதால் இந்த வாய்க்கால் அப்பகுதியில் முழுமையாக தூர் வாராமல் விடப்பட்டுள்ளது. மேலும் மகேந்திரப்பள்ளி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர வேண்டிய பெரிய வாய்க்கால், மற்றும் இந்த வாய்க்காலிலிருந்து பிரிந்து செல்லும் மூன்று கிளை வாய்க்கால்கள் இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ராமகோட்டகம் வாய்க்கால், நாணல் படுகைவாய்க்கால், குழாயடி வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களும் இதுவரை தூர்வாரப்படவில்லை. 
இதனால் தண்ணீர் தொடர்ந்து கடை மடை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று சேராமல் அதற்கு முன்பாகவே வாய்க்கால்களில் தேங்கி பயிர் செய்யப்படாத தரிசு நிலங்களில் வயல்களில் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக தண்ணீர் மேலும் எளிதில் முன்னேறி சென்று கடைக்கோடியில் உள்ள கிராமங்களுக்கு பாசனத்திற்கு பயன்படும் வகையில் வாய்க்கால்களை முழுடையாக தூர்வாரி மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகேந்திரப்பள்ளி கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story