தினத்தந்தி புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற Ôவாட்ஸ்&அப்Õ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:&
குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் 2-வது ரெயில்வே கேட் பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி ரெயில்வே கேட் அருகே குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. கழிவுநீரை வெளியேற்றி சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தனராஜ், பாலகிருஷ்ணாபுரம்.
கேட்பாரற்று கிடக்கும் பழங்கால சிலைகள்
வருசநாடு அருகே தங்கம்மாள்புரத்தில் பொட்டியம்மன் கொற்றவை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே பழங்கால கல்வெட்டுகள், சாமி சிலைகள் கேட்பாரற்று கிடக்கின்றன. இவற்றை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், தங்கம்மாள்புரம்.
கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம்
தேனி அரண்மனைபுதூர் பஞ்சாயத்து கவுண்டர் தெருவில் இருந்து வசந்தநகர் செல்லும் சாலையில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எரசைஅரசன், அரண்மனைபுதூர்.
எலும்புகூடாக மாறி வரும் மின்கம்பம்
குஜிலியம்பாறை தாலுகா சத்திரப்பட்டி ஏ.டி.காலனி ஆலம்பாடியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்பு கூடு போல் மின்கம்பம் மாறி வருகிறது. இதே நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து கீழே விழுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேசன், ஆலம்பாடி.
குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?
பழனி நகர போலீஸ் நிலையம் பின்புறம் போலீசாருக்கான குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டிச்செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் குப்பைகள் திறந்தநிலையில் கிடப்பதால் நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே போலீசார் குடியிருப்பு பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகுஜி, பழனி.
ரேஷன் கடை அமைக்க வேண்டும்
ஆத்தூர் தாலுகா வக்கம்பட்டி ஊராட்சி மைக்கேல்பட்டியில் ரேஷன் கடை இல்லாததால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பக்கத்து ஊரில் உள்ள ரேஷன் கடைக்கு நடந்தே சென்று பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மைக்கேல்பட்டியில் ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிமேகலை, மைக்கேல்பட்டி.
உறுதிதன்மையை இழந்து வரும் மின்கம்பங்கள்
தேனியை அடுத்த போடி திருவனந்தபுரம் அண்ணாநகரில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் கம்பங்கள் உறுதி தன்மையை இழந்து வருகிறது. மின்விபத்து ஏற்படுவதற்கு முன்பு இந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை நட்டு வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிவண்ணன், போடி.
சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
திண்டுக்கல்லில் இருந்து செம்பட்டி செல்லும் சாலையில் பாறைப்பட்டிக்கும், அந்தோணியார் தெருவுக்கும் இடையில் புதிதாக பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரத்தினம், பாறைப்பட்டி.
Related Tags :
Next Story