10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மனநலம் பாதிக்கப்பட்டவரை அழைத்து சென்ற சகோதரன்
10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மனநலம் பாதிக்கப்பட்டவரை அவரது சகோதரன் மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்ற நெகிழ்ச்சி சம்பவம் திருவண்ணாமலையில் நடந்தது.
திருவண்ணாமலை
10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மனநலம் பாதிக்கப்பட்டவரை அவரது சகோதரன் மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்ற நெகிழ்ச்சி சம்பவம் திருவண்ணாமலையில் நடந்தது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
திருவண்ணாமலையில் உள்ள உதவும் கரங்கள் நிறுவனத்திற்கு கடந்த 2016&ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் திருக்கோவிலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சாலையில் சுற்றித்திரிவதாக அழைப்பு வந்தது.
இதனையடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டு திருவண்ணாமலை உதவும் கரங்கள் மனநலம் காப்பகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது அவர் தனக்கு தானே சுயமாகப் பேசி கொண்டிருந்தார். மேலும் நீண்ட முடியுடன் இருந்த அவருக்கு தலைமுடி அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தி ஆடை அணிவித்து உணவு மற்றும் முதல் உதவி, மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டது.
அவரது பெயரை கேட்ட போது குமார் என்ற வார்த்தைகளை திரும்ப திரும்ப உச்சரித்தார். அந்த சமயத்தில் அவரால் தன்னைப் பற்றியோ அல்லது அவரது குடும்பத்தை பற்றியோ எந்த விவரங்களையும் கூற முடியாத நிலையில் இருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக அவர் இருக்கும் இடம் பற்றியோ அல்லது அவரது குடும்பத்தினர் பற்றியோ அவர் ஒரு வார்த்தை கூட தெரிவிக்காமல் இருந்தார்.
தொடர்ந்து அவருக்கு மனநல மருத்துவர் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சமூக சேவகர்கள் அவருடன் கவுன்சிலிங் செய்த போது 2016&ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கு முன்பு அவர் இருந்த திருநெல்வேலி, சுத்தமல்லி என்ற இடம் போன்ற சில வார்த்தைகளை தெரிவித்து உள்ளார்.
வாட்ஸ் அப் செய்தி
இதையடுத்து உதவும் கரங்கள் சமூக சேவகர் மணி என்பவர் மூலம் திருநெல்வேலியில் உள்ள அவரது நண்பர்களிடம் தொடர்பு கொண்டு குமார் பற்றிய முழு விவரங்களை அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது புகைப்படத்தையும், பெயரையும் உள்ளூர் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்தனர். வாட்ஸ் அப் செய்தியை பார்த்ததும் குமாரின் சகோதரர் சங்கரநாராயணன் என்பவர் சமூக சேவகர் மணியை தொடர்பு கொண்டு குமார் அவரது சகோதரர் என்றும், அவரை திரும்பப் பெற திருவண்ணாமலைக்கு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் குமாரின் சகோதரர் போலீசிலும் புகார் அளித்ததாக தெரிவித்தார்.
குமார் கடந்த 10 ஆண்டுகளாக மனநோயாளியாக இருந்தார். அவரது நிலை மோசமாகி ஒரு நாள் குமார் தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என்று அவரது சகோதரர் தெரிவித்து உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது சகோதரனை பற்றி அறிந்து அவரது சகோதரர் மிகவும் மகிழ்ச்சியடைந்து திருவண்ணாமலையில் உள்ள உதவும் கரங்கலுக்கு வந்து அவரைப் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story