இறைச்சி கடைகளில் விற்பனை மந்தம்


இறைச்சி கடைகளில் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 26 Sept 2021 12:17 AM IST (Updated: 26 Sept 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாதம் தொடங்கியதால் இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமானது. மேலும் குண்டடம் வாரச்சந்தையில் ஆடுகள் விலை வீழ்ச்சி அடைந்தது.

குண்டடம்
புரட்டாசி மாதம் தொடங்கியதால் இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமானது. மேலும் குண்டடம் வாரச்சந்தையில் ஆடுகள் விலை வீழ்ச்சி அடைந்தது.
சந்தையில் விற்பனை
குண்டடத்தில் சனிக்கிழமை தோறும் சந்தையில் அதிகாலையில் ஆடுகள்& கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு குண்டடம், காங்கேயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த வியாபாரிகள் விற்பனைக்காக வெள்ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் கோழிகள் ஆகியவைகளை கொண்டு வருகின்றனர். 
அதேபோல் ஈரோடு, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, கேரளா ஆகிய பகுதிகளைச்சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து அவற்றை வாங்கிச்செல்கின்றனர்.
இதுகுறித்து ஆடுகள் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரி கூறியதாவது:&
விலை வீழ்ச்சி
கடந்த சில வாரங்களாகவே ஆடுகள் கோழிகள் விற்பனை மந்தமானது. இந்த நிலையில் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை மேலும் குறையும் என்பதால் கடைகளில் இறைச்சி கடை வியாபாரிகள் குறைந்த அளவு எண்ணிக்கையில் ஆடு&கோழிகளை வாங்கிச்செல்கின்றனர். 
அதிகளவில் ஆடு&கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடைகொண்ட ஆடு ரூ.4 ஆயிரத்திற்கு 500&க்கு விற்பனையானது. இந்த வாரம் ரூ.4 ஆயிரத்து 200&க்கு மட்டுமே விற்பனையானது. குண்டடம் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வளர்ப்பு ஆடுகளும் விற்பனை ஆகவில்லை. அதேபோல் கடந்த வாரம் நாட்டுக்கோழி கிலோ ரூ.350 வரை விற்பனையானது. ஆனால் இந்த வாரம் ரூ.300 வரை மட்டுமே விற்பனையானது. வழக்கமாக புரட்டாசி சீசனில் ஆடுகள் மற்றும் கோழிகளின் விலை குறைவாகத்தான் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story