புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் ஆகம விதிகளின்படி சிறப்பு பூஜை


புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் ஆகம விதிகளின்படி சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 26 Sept 2021 12:31 AM IST (Updated: 26 Sept 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் ஆகம விதிகளின் படி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை:
புரட்டாசி மாதம்
தமிழ் மாதங்களில் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் சனிக்கிழமை விசேஷ நாளாகும். தற்போது தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். 
கோவில்களின் வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையான நேற்று புதுக்கோட்டையில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர். புதுக்கோட்டையில் வரதராஜ பெருமாள் கோவில், விட்டோபா பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் ஆகம விதிகளின் படி நடைபெற்றது.
வெள்ளிக்கவசம்
திருக்கோகர்ணம் சீனிவாச பெருமாள் கோவிலில் மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல உற்சவர் சீனிவாச பெருமாள், பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையில் ஆகம விதிகளின் படி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Next Story