குண்டு மல்லி கிலோ ரூ.440-க்கு விற்பனை


குண்டு மல்லி கிலோ ரூ.440-க்கு விற்பனை
x
தினத்தந்தி 26 Sept 2021 12:32 AM IST (Updated: 26 Sept 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பூ விலை வீழ்ச்சி அடைந்தது. குண்டு மல்லி கிலோ ரூ.440-க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

நொய்யல், 
பூ விவசாயிகள்
கரூர் மாவட்டம் நொய்யல், சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குண்டுமல்லி, முல்லை, அரளி, ரோஜா, சம்பங்கி, செவ்வந்தி, செண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிரிட்டுள்ளனர். தற்போது பூ விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 40 ஏக்கரில் பூ பயிரிடப்படுகிறது. பூக்கள் பூக்கும் தருவாயில் கூலி ஆட்கள் மூலம் பறித்து லேசான கோணிப்பையில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம்.
குண்டு மல்லி கிலோ ரூ.440-க்கு விற்பனை
தற்போது திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததாலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாததாலும் பூக்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. கடந்த வாரத்தில் (ஒரு கிலோ) குண்டு மல்லி ரூ.800-க்கும், முல்லை ரூ.700-க்கும், அரளி ரூ.150-க்கும், ரோஜா ரூ.200-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.180-க்கும் தாமரை ஒரு பூ ரூ.35-க்கும் விற்பனையானது.
நேற்று முன்தினம் குண்டு மல்லி ரூ.440-க்கும், முல்லை ரூ.320-க்கும், அரளி ரூ.60-க்கும், ரோஜா ரூ.120-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், தாமரை ஒரு பூ ரூ.20-க்கும் விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story