கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவானவர் கைது


கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவானவர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2021 12:32 AM IST (Updated: 26 Sept 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவானவரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:
உவரி அருகே உள்ள கரைசுத்து புதூரை சேர்ந்தவர் அருளானந்தம். இவருடைய மகன் தேவ இரக்கம் (வயது 41). கடந்த 2007-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த லிங்கநாடார் மகள் கனகா என்பவருக்கு சொந்தமான ஆடுகளை காதை அறுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராற்றில் கனகாவை, தேவ இரக்கம் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அங்கு அவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் தலை மறைவாகி விட்டார். எனவே அவருக்கு பிடிவாரண்டு பிறக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தேவ இரக்கத்தை, உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி கைது செய்து சிறையில் அடைத்தார்.

Next Story