விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Sept 2021 12:47 AM IST (Updated: 26 Sept 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்புவனம்,

சிவகங்கை தாலுகா தமராக்கி அருகில் உள்ள குமாரபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 60). இவரது மகள் வசந்தி அரசனூர் சமத்துவபுரத்தில் வசித்து வருகிறார். கருப்பையா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உடல் வேதனை தாங்க முடியாமல் கருப்பையா விஷம் குடித்து வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரது மகள், அவரை மீட்டு பூவந்தியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story