முன்னெச்சரிக்கையாக மேலும் 116 பேர் கைது
அடுத்தடுத்து 2 பேர் கொலை தொடர்பாக முன்னெச்சரிக்கையாக மேலும் 116 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை அருகே கீழசெவல் நயினார்குளத்தைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் (வயது 38), கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (37) ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 18 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் குற்றங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 379 பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதில் 172 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மேலும் 278 பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதில் 116 பேரை போலீசார் கைது செய்தனர். மீதி 162 பேர் மீது தொடர் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story