16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டர் கைது
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டர் கைது
ஓமலூர், செப்.26-
ஓமலூர் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
டீ மாஸ்டர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 7 மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிபாடியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். அவரது பெற்றோர் சில நாட்கள் இருந்து விட்டு பாட்டிக்கு உதவியாக இருக்க சிறுமியை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு திருச்செங்கோட்டுக்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் 16 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சரவணன் (வயது 28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரவணன், அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி அவரது பாட்டி வீட்டில் தாலி கட்டி உள்ளார். பின்னர் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
சிறுமி கர்ப்பம்
இந்த நிலையில் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்திருப்பதாக சேலம் மாவட்ட சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தும்பிபாடிக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமியை மீட்டு சேலத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இது குறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் போலீசார், சிறுமியை ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சரவணன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story