புரட்டாசி மாத 2வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி மாத 2வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 26 Sept 2021 12:55 AM IST (Updated: 26 Sept 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத 2வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

தர்மபுரி:
புரட்டாசி மாத 2&வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத 2&வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஒவ்வொரு கோவில் முன்பும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டு இருந்தது. தர்மபுரி கோட்டை வர மகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. 
இதேபோல் தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், குமாரசாமிப்பேட்டை பூதேவி, ஸ்ரீதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிட வந்திருந்தனர். ஆனால் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வெளியில் நின்றவாறு சாமி தரிசனம் செய்தனர். 
மணியம்பாடி
இதேபோன்று அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், பழைய தர்மபுரி வரதகுப்பம் வெங்கடரமண சாமி கோவில், சோகத்தூர் திம்மராய பெருமாள் கோவில், செட்டிகரை பெருமாள் கோவில், அக்கமனஅள்ளி ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவில், மணியம்பாடி  வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத 2&வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 
மேலும் அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, மிக்கனஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மாரண்டஅள்ளி, பொம்மிடி பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்காததால் அவர்கள் கோவிலுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சில பக்தர்கள் கோவிலுக்கு வெளியே கோபுரம் மற்றும் கொடி மரத்தை வழிபட்டு சென்றனர்.
காரிமங்கலம்
காரிமங்கலம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சாமி கோவிலில் புரட்டாசி மாத 2&வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. காரிமங்கலம் அடுத்த சஞ்சீவிராயன் மலையில் உள்ள சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. இதையொட்டி மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவில், மோதூர் பெருமாள் கோவில், பிக்கனஅள்ளி சென்னகேசவபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Next Story