மின்சாரம் பாய்ந்து பிளஸ்&2 மாணவி பலி
மின்சாரம் பாய்ந்து பிளஸ்&2 மாணவி பலி
தொட்டியம், செப்.26&
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அம்மன்குடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். விவசாயக்கூலித்தொழிலாளி. இவரது மகள் சங்கவி (வயது 17). இவர் கொளக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்&2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சங்கவி டியூசனுக்கு சைக்கிளில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டில் உள்ள தகர கொட்டகையில் சைக்கிளை நிறுத்திய போது, தகர கொட்டகையில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இதை கவனிக்காமல் தொட்டதில் சங்கவி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிளஸ்&2 மாணவி மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அம்மன்குடி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Tags :
Next Story