தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 26 Sept 2021 1:03 AM IST (Updated: 26 Sept 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாதுகாப்பற்ற நிலையில் குடிநீர் குழாய்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் புதுக்குறிச்சி கிராமத்தில் அம்பேத்கர் தெருவில்  பள்ளம் தோண்டி அதில் குடிநீர் குழாய் அமைத்துள்ளனர். இதனால் இந்த பள்ளத்தில் குழந்தைகள் விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சாலையோரத்தில் பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பாபு,  புதுக்குறிச்சி, பெரம்பலூர்.

புதிய மின்கம்பம் நட்டும் பயனில்லை 
கரூர் மாவட்டம் புலியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியார் நகர் தெருவில் மின்கம்பங்கள் நடப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனை அறிந்த அதிகாரிகள் அதன் அருகே புதிய மின்கம்பத்தை நட்டுள்ளனர். ஆனால் இன்னும் பழைய மின்கம்பத்தில் இருந்து புதிய மின் கம்பத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள்,  பெரியார் நகர், கரூர். 

உயர் மின் கோபுரம் அமைத்தும் பலனில்லை 
அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் செல்லும் சாலையில் முனியங்குறிச்சி பிரிவு பாதை உள்ளது. மேலும் மு.புத்தூரில் இயங்கி வரும் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு செல்லும் லாரிகள் தாறுமாறாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை நிலவி வந்தது.  அதை கருத்தில் கொண்டு முனியங்குறிச்சி பிரிவு பாதையில் சில மாதங்களுக்கு முன்பு தனியார் சிமெண்டு தொழிற்சாலை சார்பில் உயர் மின் கோபுரம் அமைத்து கொடுக்கப்பட்டது. இதில் இருந்து போதிய அளவு வெளிச்சம் வராததால் அப்பகுதியில் எப்போதும் போல் காட்சி அளிக்கிறது. தற்போது உயர் மின் விளக்கு கோபுரம் இருக்கு ஆனால் இல்லை என்ற நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அருள்ராஜ், முனியங்குறிச்சி, அரியலூர். 

பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நங்கவரம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் வார்டு எண் 12 நச்சலூர்- ரசம்பட்டி, தளிஞ்சி பஞ்சாயத்து  புரசம்பட்டி காலனி திருச்சி செல்லும் சாலை வரை ஆங்காங்கே சாலையில் பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் பழுது அடைவதுடன் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், மேலப்பட்டி, கரூர். 

நிறுத்தப்பட்ட நகர பஸ்கள் இயக்கப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோவில் ஒன்றியம் பெரிய தம்பி உடையான்பட்டி ஊராட்சியில் உள்ள அண்டக்குளம் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாக வந்து கொண்டிருந்த 2 நகரப் பஸ்களும் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் சுமார் 16 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மகிமை ராஜ், பெரிய தம்பி உடையான்பட்டி, புதுக்கோட்டை.

குரங்குகளை பிடிக்க வேண்டுகோள் 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணாநகரில் அதிக அளவில் குரங்குகள் காணப்படுகிறது. இந்த குரங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து தின்பண்டங்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று விடுகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள மாமரம், கொய்யா மரங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை கடிக்க வருவது போல் அச்சுறுத்தி வருகிறது. எனவே இப்பகுதியில் உள்ள குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைச்செல்வன், ஜெயங்கொண்டம், அரியலூர்.

சாலையில் செல்லும் கழிவுநீர் 
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மகாதானபுரம் தீத்தாம்பாளையத்தில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்காததால் இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் அப்பகுதி மக்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் கழிவுநீர் சாலையில் செல்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தீத்தாம்பாளையம், கரூர்.

குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி 
புதுக்கோட்டை  டவுன்  ராஜகோபாலபுரம் வாரிப்பட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 4 ஆண்டு காலமாக நகராட்சி மூலம் குடிநீர் குழாய் பெற்று, குடிநீர் சரிவர   வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
முத்துகிருஷ்ணன், வாரிப்பட்டி, புதுக்கோட்டை. 


உபயோகமற்ற பயணிகள் நிழற்குடை 
திருச்சி மாவட்டம்  அரியமங்கலம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை  பழுதடைந்து மேற்கூரைகள் பெயர்ந்து காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகள் மழையிலும், வெயிலில் நின்று தங்காக செல்ல வேண்டிய ஊருக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், அரியமங்கலம், திருச்சி. 

வயல்வெளியை போல் காட்சி அளிக்கும் சாலை
திருச்சி மாவட்டம், காட்டூர், விண் நகரில் திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் தோறும் ஏராளமான மக்கள் தங்கள் ஆவணங்களை பதிவு செய்வதற்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில்  இந்த அலுவலகத்திற்கு செல்ல பெரிதும் பயன்படும் திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையிலிருந்து வரும் விண்நகர் மெயின் தெருவானது குண்டும் குழியுமாக, சேரும் சகதியுமாக வயல்வெளிபோல் காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஜெஸ்டின் ராஜா, காமராஜ் நகர், திருச்சி.

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம் அருகே அயிலாப்பேட்டை கிராமத்தில் வடக்கு தெருவில் உள்ள சாலை  பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், அயிலாப்பேட்டை, திருச்சி.

பெயர் பலகை வைக்க கோரிக்கை
திருச்சி மாநகராட்சி 8வது வார்டில் எஸ்.எஸ்.நகர், கீழே தேவதனம் என இரண்டு தெருக்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்தத் தெருக்களுக்கு பெயர் பலகை  வைக்கப்படாததால் விலாசம் தேடி வருபவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எத்திராஜ், எஸ்.எஸ்.நகர், திருச்சி.

பன்றிகள் தொல்லை அதிகரிப்பு 
திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில் ஊராட்சி செல்லத் தமிழ் நகரில் பன்றிகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பன்றிகள் அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை களைப்பதும், கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி வருவதாலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால்ராஜ், செல்லத்தம்பி நகர், திருச்சி.

கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி பெரிய கம்மாள தெரு காளிகா பரமேஸ்வரி கோவில் அருகிலுள்ள வளையல் கார தெருவின் சாலையோரத்தில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், திருச்சி. 

தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் புதிய கள்ளிக்குடி மார்க்கெட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கொங்கு டவுன் பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் சாலையில் நடந்து செல்ல மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை இருள் சூழ்ந்து இருப்பதால் இரவு நேரத்தில் விஷ ஜந்துக்கள் அவர்களை கடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சகாயராஜ், கொங்கு டவுன், திருச்சி.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம் 
திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் பாலக்குறிச்சி ஊராட்சி ஸ்ரீரங்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள உயர்மின் அழுத்த மின் கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் கீழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 பொதுமக்கள், ஸ்ரீரங்கம்பட்டி, திருச்சி. 


Next Story