மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 26 Sept 2021 1:17 AM IST (Updated: 26 Sept 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு

கல்லக்குடி, செப்.26
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கார்த்திக் (வயது 28).. இவரும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் உதயகுமார் (32) என்பவரும் பெரம்பலூர் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கடந்த 16&ந்தேதி இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கீழப்பழுவூரில் உள்ள நண்பர் ஒருவரது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். மால்வாய்&கல்லகம் சாலையின் சாத்தப்பாடி பிரிவு ரோடு வளைவில்  சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளுடன்கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் சிகிச்சை பலன்இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த கார்த்திக்குக்கு ஷிபா என்ற மனைவியும், லாக்மிதா என்ற 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.



Next Story