தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பின்றி கிடக்கும் குடிநீர் தொட்டி
கும்-ப-கோ-ணம் அரசு மருத்-து-வ-ம-னை-யில் சுற்று வட்-டா-ரத்தை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வரு-கி-றார்கள். இந்த நிலை-யில் அரசு மருத்-து-வ-மனை முன்பு தண்-ணீரை சுத்-தி-க-ரிக்கும் கருவி பொருத்-தப்-பட்டு குடி-நீர் தொட்டி வைக்கப்-பட்டு இருந்-தது. இந்த தொட்-டி-யில் இருந்து வரும் குடி-நீரை அங்கு வரும் நோயா-ளி-களும், பொது-மக்க-ளும் பயன்-ப-டுத்தி வந்-த-னர். தற்-போது தண்-ணீரை சுத்-தி-க-ரிக்கும் கருவி மற்-றும் குடி-நீர் தொட்டி பரா-ம-ரிப்-பின்றி காணப்-ப-டு-கி-றது. இத-னால் நோயா-ளி-கள், பொது-மக்கள் தண்-ணீர் இல்-லா-மல் பாதிக்கப்-பட்-டுள்-ள-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் பரா-ம-ரிப்-பின்றி காணப்-ப-டும் குடி-நீர் தொட்-டியை சரி செய்ய வேண்-டும் என்று அப்-ப-குதி பொது-மக்கள் கோரிக்கை விடுத்-துள்-ள-னர்.
-&பொது-மக்கள், கும்-ப-கோ-ணம்.
தாணிய கிடங்கு கட்டித்தர வேண்டும்
தஞ்சை மாவட்டம் கொல்லாங்கரை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு விவசாயிகள் கொள்முதல் செய்தற்காக கொண்டு வரும் நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்துவிடுகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை வைக்க போதுமான இட வசதியும் இல்லை. மேலும் மழை காலத்தில் திறந்தவெளியில் நெல்மூட்டைகள் வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கான்கீரிட் கட்டிடம் மற்றும் தாணிய கிடங்கு கட்டித்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
&பன்னீர்செல்வம், கொல்லாங்கரை, தஞ்சாவூர்.
குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?
திரு-வி-டை-ரு-தூர் வடக்கு-ம-ட-வி-ளா-கம் குடி-நீர் தொட்டி கடந்த பல மாதங்க-ளாக பழு-த-டைந்து காணப்-ப-டு-கி-றது. இந்த தொட்டி மூலம் அப்-ப-கு-தியை சேர்ந்த பொது-மக்கள் குடி-நீரை பயன்-ப-டுத்தி வந்-த-னர். மேலும் அந்த வழி-யாக செல்-ப-வர்கள், மாணவ&மாண-வி-களும் இந்த குடி-நீரை பயன்-ப-டுத்-தி-னர். தற்-போது தண்-ணீர் இல்-லா-மல் அப்-ப-குதி பொது-மக்கள் சிர-மப்-பட்டு வரு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் பழு-த-டைந்த குடி-நீர் தொட்-டியை சீர-மைத்து தர வேண்-டும் என்று அப்-ப-குதி பொது-மக்க-ளின் கோரிக்-கை-யா-கும்.
-&வெங்-க-டே-சன், வடக்கு-ம-ட-வி-ளா-கம், திரு-வி-டை-ம-ரு-தூர்.
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாநகராட்சி 44&வது வார்டு நாகம்மாள் நகர் ராயல் கார்டன், ராஜீவ் நகர், சோழன் நகர் ஆகிய பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. நாகம்மாள் நகர் பகுதியில் பாதாள சாக்கடை தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வீடுகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் இணைப்பு வழங்கவில்லை. இதனால் கழிவு நீரை வெளியேற்றுவதில் சிரமம் உள்ளது. மேலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைகாலத்தில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும். மேலும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
&சக்கரபாணி, நாகம்மாள் நகர், தஞ்சாவூர்.
Related Tags :
Next Story