மசாஜ் சென்டரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
மசாஜ் சென்டரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்களூரு: மசாஜ் சென்டரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் தொல்லை
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா அருகே கல்லாரா பகுதியில் சிநேகா ஆயுர்வேதிக் பஞ்சகர்மா என்ற பெயரில் மசாஜ் சென்டர் அமைந்துள்ளது. இந்த மசாஜ் சென்டரை கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த ஆபிரகாம் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி இளம்பெண் ஒருவர் அந்த மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார்.
அப்போது மசாஜ் சென்டர் உரிமையாளர் ஆபிரகாம் அந்த இளம்பெண்ணுக்கு மசாஜ் செய்துள்ளார். அந்த சமயத்தில், ஆபிரகாம் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதற்கு அந்த இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
உரிமையாளர் கைது
அப்போது மசாஜ் சென்டர் உரிமையாளர் ஆபிரகாம், இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக அந்த இளம்பெண்ணை மிரட்டி உள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்து தப்பித்து இளம்பெண் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து அந்த இளம்பெண், கடபா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மசாஜ் சென்டர் உரிமையாளர் ஆபிரகாமை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாகவும் அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story