வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரை தாக்குபவர்களின் பெயர்கள் ரவுடி பட்டியலில் சேர்க்கப்படும்
வாகன சோதனையில் ஈடுபடும்போது போலீசாரை தாக்கினால், அவர்கள் பெயர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்படும் என்று இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தே கவுடா எச்சரித்துள்ளார்.
பெங்களூரு: வாகன சோதனையில் ஈடுபடும்போது போலீசாரை தாக்கினால், அவர்கள் பெயர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்படும் என்று இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தே கவுடா எச்சரித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தே கவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
விபத்துகள் அதிகரிப்பு
பெங்களூருவில் கொரோனா காரணமாக குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை சோதனை செய்வது நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் சமீபமாக குடிபோதையில் வாகனங்களை ஓட்டி பெரிய அளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற விபத்துகள், உயிர் பலி ஏற்படுவதை தடுக்கும் விதமாக பெங்களூருவில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா¢களை பிடிக்க மீண்டும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (அதாவது நேற்று) முதல் பெங்களூரு நகரில் உள்ள 44 போக்குவரத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க போலீசாரால் சோதனை நடத்தப்படும். வாகன ஓட்டிகள் மதுஅருந்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே சோதனை நடத்தப்படும். கொரோனா காரணமாக போலீசார் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாதவாறு முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான முறையில் இந்த சோதனை நடத்தப்படும்.
சோதனை
டிரைவர்கள், வாகன ஓட்டிகள் மதுஅருந்தி உள்ளார்களா? என்பதை கண்டறிவதற்காக, அவர்களுக்கு தனித்தனியாக உறி குழாய் (ஸ்ட்ரா) வழங்கப்படும். ஒருவர் பயன்படுத்தும் ஸ்ட்ரா மற்றொரு வாகன ஓட்டிக்கு வழங்கப்படாது. அந்த ஸ்ட்ரா முறையாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். அதன்பிறகு, 3 நாட்கள் கழித்து தான் மீண்டும் அந்த உறி குழாய் மூலம் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனையில் ஈடுபடும் ஒவ்வொரு போலீசாருக்கும், கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்படும். சோதனை செய்யப்படும் வாகன ஓட்டிகளுக்கும் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும்.
ரவுடி பட்டியலில் சேர்ப்பு
சோதனையின் போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, போலீசாரை தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன், போலீசாரை தாக்கும் நபர்களின் பெயர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்படும். பெங்களூருவில் டோயிங் வாகன ஊழியர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகின்றன.
பொதுமக்களிடம் தவறாக பேசும்டோயிங் வாகன ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, வாகன ஓட்டிகள் இல்லாமல் இருந்து அந்த வாகனம் டோயிங் செய்யப்பட்டால், அதற்கான கட்டணத்தை கொடுக்க வேண்டிய கட்டாயமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story