அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2021 6:03 AM IST (Updated: 26 Sept 2021 6:03 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடி முன்மொழிவுகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மீனா பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முரளி, வித்யா, தேர்தல் தாசில்தார் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story