திருவள்ளூர் அருகே பஸ் கண்ணாடியை தலையால் உடைத்த வடமாநில தொழிலாளி
திருவள்ளூர் அருகே பஸ் கண்ணாடியை வடமாநில தொழிலாளி தலையால் முட்டி உடைத்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ஆவடியில் இருந்து நேற்று முன்தினம் மாநகர பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை திருவள்ளூரை அடுத்த அல்லிக்குளம், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (47) என்பவர் ஓட்டி வந்தார்.
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு நாகாத்தம்மன் கோவில் அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது, ஒருவர் திடீரென குறுக்கே புகுந்தார். இதையடுத்து பஸ்சை டிரைவர் திடீரென நிறுத்திய நிலையில், பஸ்சின் முன்பக்க கண்ணாடியை தலையில் மோதி உடைத்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதை கண்ட பஸ்சில் இருந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த லாலு சக்சேனா (வயது 45) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் அப்பகுதியில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து டிரைவர் ரமேஷ் செவ்வாப் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story