கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் மட்டும் இடைத்தேர்தல்


கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் மட்டும் இடைத்தேர்தல்
x
தினத்தந்தி 26 Sept 2021 3:10 PM IST (Updated: 26 Sept 2021 3:10 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 4 கிராம ஊராட்சிகளிலும் 4 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதே சமயத்தில் ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் மட்டும் வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள ஆரம்பாக்கம் ஊராட்சியில் 11-வது வார்டு, எளாவூர் ஊராட்சியில் 9-வது வார்டு, மாநெல்லூர் ஊராட்சியில் 4-வது வார்டு, ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் 2 மற்றும் 5-வது வார்டு, மேல்முதலம்பேடு ஊராட்சியில் 2-வது வார்டு என 5 ஊராட்சிகளில் மொத்தம் 6 வார்டுகளுக்கான வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகிற அக்டோபர் 9-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் நியமிக்கப்பட்டு உள்ளார். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 6 கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 11 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து இருந்தனர்.

இந்த நிலையில், வேட்பாளர்கள் வாபசுக்கு பிறகு 4 ஊராட்சிகளில் 4 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதே சமயத்தில் ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் 2-வது வார்டுக்கு 4 பேரும், 5-வது வார்டுக்கு 2 பேரும், என 6 வேட்பாளர்கள் களத்தில் நின்று போட்டியிடுகின்றனர்.

இதனால் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சியில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story