செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எந்திரம் வெடித்து தீ விபத்து - நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்


செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எந்திரம் வெடித்து தீ விபத்து - நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2021 4:42 PM IST (Updated: 26 Sept 2021 4:42 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எந்திரம் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஸ்கேன் எடுக்க சென்ற நோயாளிகள் மற்றும் ஆபரேட்டர் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடினர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் அமைந்துள்ள எம்.ஆர்.ஐ.ஸ்கேன் பிரிவில் ஸ்கேன் எடுப்பதற்காக 2 நோயாளிகள் நேற்று மாலை சென்றனர்.

அப்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங் எந்திரத்தில் பொருத்தப்பட்ட பேட்டரிகள் திடீரென ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தது. இதனால் ஸ்கேன் எடுக்க சென்ற நோயாளிகள் மற்றும் ஆபரேட்டர் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடினர்.

இந்த நிலையில் சில நிமிடங்களில் ஆஸ்பத்திரி தரைத்தளம் முழுவதும் தீ பரவி கரும்புகை சூழ்ந்தன. இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் அந்த கட்டிடத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட அனைத்து நோயாளிகளையும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவசர அவசரமாக வெளியேற்றினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத் தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story