கம்பத்தில் முதல் போக நெல் சாகுபடி அறுவடை பணிகள் தொடக்கம்
கம்பத்தில் முதல் போக நெல் சாகுபடி அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன.
கம்பம்:
தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் போக பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடவுசெய்யப்பட்ட முதல் போக சாகுபடியில் தற்போது முதற்கட்டமாக காமயகவுண்டன்பட்டி சாலை சின்னவாய்க்கால் பகுதியில் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. ஓரிரு வாரங்களில் கூடலூர், சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனிடையே அறுவடையாகும் விவசாய நிலங்களுக்கு அருகிலேயே அரசு நெல் கொள்முதல் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story