தூத்துக்குடி விநியோகஸ்தர்கள் சபை கூட்டம்


தூத்துக்குடி விநியோகஸ்தர்கள் சபை கூட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2021 5:50 PM IST (Updated: 26 Sept 2021 5:50 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விநியோகஸ்தர்கள் சபை கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி:
தூத்துக்குடி விநியோகஸ்தர்கள் சபை ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி புஷ்பாநகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சபை தலைவர் ராம்நாத் தலைமை தாங்கினார். சேர்மன் பிரபாகர் முன்னிலை வகித்தார். செயலாளர் அக்னிராஜ் என்ற காந்தி வரவேற்று பேசினார். பொருளாளர் மகேஷ் வரவு, செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் வெங்கடேஷ், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விநாயகமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், தென்னிந்திய விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வது, தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டை விலை கொள்கையை எதிர்த்து மாநிலம் தழுவிய அளவில் வணிகர்கள் சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவது, அனைத்து தர நிர்வாக செலவுகளும் அதிகரித்து வருவதால் விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் அளித்து வரும் லாப விகிதத்தை அதிகரித்து வழங்க வேண்டும், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் சேதம் அடைந்த, மற்றும் காலாவதியான பொருட்களை திரும்ப பெற வேண்டும், அவ்வாறு நடந்து கொள்ளாத நிறுவனங்களை இனம் கண்டு, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மாநில சங்கம் மூலம் மேற்கொள்ள வேண்டும், விநியோகஸ்தர் விரோத செயல்களில் ஈடுபடும் நிறுவனத்தை கண்டிப்பது, தமிழ்நாடு அரசின் வணிகர் நல வாரியத்தில் கூட்டமைப்பின் சார்பில் ஒரு அலுவலர் சாரா உறுப்பினர் பொறுப்பு வழங்க அரசுக்கு வேண்டுகோள் விடுப்பது, கொரோனாவால் உயிர் இழந்த வினியோகஸ்தர்கள் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமர்நாத், இளங்கோ மனோகரன், அன்சார் அலி ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story